தூத்துக்குடியில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய சுகாதார வளாகம் அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், “தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையம், முத்து நகர் கடற்கரை, சிவன் கோயில் மற்றும் ரோச் பூங்கா கடற்கரை ஆகிய இடங்களில் மேலும் ஒரு புதிய சுகாதார வளாகம் வேண்டும் என்ற மாநகர மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து அந்தப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
மேலும் வரும் நாட்களில் பணிகள் ஆரம்பமாகும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி ஆகியோர் உடனடிருந்தனர்


