தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நன்கொடையாக பெறப்பட்ட 16 ஸ்ட்ரெச்சர்களை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகத்த பொதுமக்கள் பயன்பாட்டுக்காக துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிஎஸ்ஆர் நிதி மூலமாக ரூ.2 லட்சம் மதிப்புள்ள 16 ஸ்ட்ரெச்சர்களை திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
விழாவில் உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பிரபு, மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், கண்காணிப்பாளர் மருத்துவர் பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


