தூத்துக்குடியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் சுயம்வரம் திருவிழாவை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு எச்எம்எஸ் உழைப்பாளர் சங்கம், மற்றும் தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனுடையோர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான மாபெரும் சுயம்வரம் திருவிழா நிகழ்ச்சி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவனர் தலைவர் கராத்தே ஐ கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். தேசிய துணை தலைவர், உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழ்நாடு எச்எம்எஸ் உழைப்பாளர் சங்கம் மாவட்ட தலைவர் டாக்டர் ராஜலட்சுமி ராஜ்குமார், கௌரவ தலைவராக கலந்து கொண்டு பேருரை ஆற்றினார்.
சமூக ஆர்வலர் ஓம் சக்தி சங்கர் ஜி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணை தலைவர் விஜயக்குமார், எச்எம்எஸ் மாவட்ட தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணை தலைவர் பூபதி, மாற்று திறனாளிகள் மாவட்ட நல அலுவலர் பிரம்நாயகம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பென்பன் வெர்ஜன், ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் வெர்ஜில், மாவட்ட துணை தலைவர் அந்தோணி ராஜ், மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு காதுகேளாதோர் சங்கம் மெய்கண்டன், மற்றும் மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக SIDDS செயலாளர் அழகு லெட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார். நிறைவாக மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன் நன்றியுரை நிகழ்த்தினார்.


