கோவில்பட்டியில் நடந்த சர்வதேச மகளிர் தின விழாவில் அரசு பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாரதி கண்ட புதுமைப்பெண் விருது வழங்கப்பட்டது
கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த சர்வதேச மகளிர் தின விழாவிற்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராஜ்,தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி பேராசிரியர் கோகிலா அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதாவிற்கு பாரதி கண்ட புதுமைப்பெண் விருது மற்றும் பல்வேறு கலை இலக்கிய போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். பாரதி கண்ட புதுமைப்பெண் விருது பெற்ற தலைமையாசிரியை ஜெயலதா ஏற்புரை வழங்கினார்,
இதில் கல்லூரி பேராசிரியர்கள் பிரேமலதா,செல்வம்,ரமேஷ்,ஆனந்தகுமார், உள்பட கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி பேராசிரியை ஸ்ருதி நன்றி கூறினார்.


