தூத்துக்குடியில் 100பேர் ரத்ததானம் வழங்கிய நிகழ்விற்காக மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் நிர்வாகிகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவக்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் உயிர் காக்கும் இயக்கம் சார்பாக கடந்த மாதம் 22ஆம் தேதி மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். இதனை பாராட்டும் விதமாக மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஜாய்சன் மற்றும் நிர்வாகிகளுக்கு அரசு மருத்துவமணை முதல்வர் சிவக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்


