தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் பகுதியில் உள்ள பொன் சுப்பையா நூலகத்தை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் மேயர் கூறும்போது, “கிருஷ்ணராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள பொன்சுப்பையா திருமண மண்டபம் அருகில் உள்ள சாலை மற்றும் பொன் சுப்பையா நூலகம் ஆகியவற்றை பொதுமக்களின் கோரிக்கையிணை தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
அப்பொழுது ஏற்கனவே இருக்கின்ற அந்த பேவர் சாலையை உயர்த்தி தருகிறேன் என்று மண்டபத்தின் உரிமையாளரும் பொன் சுப்பையா அவர்களின் மகனுமான பிரேம் வெற்றி கூறியுள்ளார்கள். மேலும் நூலகமானது அவர்களால் புதுப்பிக்கப்பட்டு தரப்படும் என்றும் தெரிவித்தார். ஆய்வின்போது தூத்துக்குடி லாரி புரோக்கர்ஸ் சங்கத்தின் தலைவர் சுப்புராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்..


