சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை தொகை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
இதில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து ஒரு தாம்பூலத்தில் தேங்காய், பழம், பட்டு சேலை, இனிப்பு வகைகள், வெற்றிலை, பாக்கு உள்பட பல்வேறு பொருட்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.


