தூத்துக்குடி வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தூத்துக்குடி நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் தூத்துக்குடி வருகை தந்தார். விமான நிலையத்தில் ஆளுநர் ஆர். என்.ரவியை மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் புத்தகம் வழங்கி வரவேற்றார்.


