தூத்துக்குடி மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் இன்று (24.02.2025) கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 “முதல்வர் மருந்தகங்களை” காணொலி வாயிலாக திறந்து வைத்து பேருரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதல்வர் மருந்தகத்தினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மேயர் பெ.ஜெகன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


