தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி விழா அரங்கில், தமிழக முதல்வரின் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு செயல் திட்டத்தின்படி மனநல மருத்து சிகிச்சைத்துறை மற்றும் போதைக்கு எதிரான மாணவர் குழு இணைந்து உருவாக்கிய விழிப்புணர்வு பாடல் வெளியீடு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் கு.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி தலைமையிலான இசைக்குழு மூலம் இயற்றப்பட்ட விழிப்புனர்வு பாடலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜாண் வெளியிட்டார். பின்னர் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்ப பயிலும் மாணவர்களுக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் கலைவாணி, காவல் துணைக் கண்காணிப்பாளர் மதன், மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மனநல மருத்துவ சிகிச்சைத்துறை தலைவர் அப்துல் ரகுமான், அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவர்கள், அலுவலக பணியாளர்கள், மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.


