தூத்துக்குடி கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவர் நீக்கப்பட்டதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கல்வி கட்டணத்திற்கு எதிராக போராடிய மாணவர் சங்கத் தலைவர் நேசமணியை நிரந்தர நீக்கம் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், நிரந்தர நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் கல்லூரிக்குள் சேர்த்திட வேண்டும். தமிழக அரசே கல்லூரியை ஏற்று நடத்திட வேண்டும். அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை அமலாக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி மாணிக்கம் மஹால் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் தலைமை வகித்தார். வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் சுரேஷ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாவட்ட செயலாளர் பூமயில் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் தெள. சம்ஷீர் அகமது நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாணவர், வாலிபர், மாதர், தொழிற்சங்கம், விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.


