செய்துங்கநல்லூரில் வியாபாரிகள் சங்க பொதுக் குழு கூட்டம் நடந்தது.
சங்க தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார். செயலாளர் பிச்சை பூபாலராயன், பொருளாளர் பால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாகிர் உசேன் வரவேற்றார். கூட்டத்தில் கருங்குளம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா முத்து சிறப்புரையாற்றினார். சங்கத்தின் சட்ட ஆலோசகர் இசக்கிபாண்டி, துணை பொருளாளராக சாதிக் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் கௌரவ ஆலோசகர் சுடலைமணி, நிர்வாக குழு செல்வம், பட்டுராஜ், கனகராஜ் ராயன், கனகராஜ், தளவாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மந்திரம் நன்றி கூறினார்.


