தாமிரபரணி புஷ்கர திருவிழாவிற்கு திருப்பணி செய்ய அரசு பணம் ஓதுக்கீடு செய்யவேண்டும் என செய்துங்கநல்லூரில் நடந்த திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி ச.ம.க செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி ச.ம.க செயல்வீரர்கள் கூட்டம் செய்துங்கநல்லூரில் உள்ள மகாலெட்சுமி மகாலில் நடந்தது. மாநில துணை பொது செயலாளர் சுந்தர் தலைமை வகித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சங்கர் வரவேற்றார்.
கூட்டத்தில் திருவைகுண்டம் தொகுதியில் புதிய உறுப்பினர்கள் அதிக அளவில் சேர்க்கவேண்டும், ஆகஸ்ட் 31 ந்தேதி நடைபெறும் கட்சி தொடங்கி 12 ம் வருட ஆண்டுவிழாவுக்கு திரளாக தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும், தாமிரபரணி புஷ்கர திருவிழாவிற்கு மிக அதிகமான பக்தர்கள் இந்தியா முழுவதும் இருந்து வந்து தாமிரபரணியில் குளிப்பார்கள். அவர்களுக்கு பாதுகாப்பும், தங்க வசதியும் அரசு செய்துகொடுக்கவேண்டும். தாமிரபரணியில் சாக்கடை கலக்காமல் இருக்கவும், மண்டபங்கள், படித்துறைகள் திருப்பணி செய்து, அமலை செடிகளை அகற்ற மத்திய, மாநில அரசுகள் பணம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில்மாநில இளைஞரணி துணைச் செயலாளர் குருஸ்திவாகர், மாவட்ட மகளிர் அணிச்செயலாளர் ஜெயந்திகுமார், ஒன்றியசெயலாளர்கள் திருச்செந்தூர் ரவி. உடன்குடி சிவகணேசன், திருவைகுண்டம் தேவராஜ், ஆழ்வார்தெற்கு லென்சிங், வடக்கு துரைராஜ், சாத்தான்குளம் ஜான்ராஜா, சரத்கோபு, அந்தோணிசிலுவை, பட்சிராஜன், லெட்சுமணன், சபரிசெல்வம், சரத்பெருமாள், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கருங்குளம் செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.


