திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஸ்பெஷல் பிரான்ச், எஸ். பி .சி .ஐ. டி , ஹை கோர்ட் , விஜிலன்ஸ் மற்றும் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாபநாசம் டேம் பகுதியில் 31 வருட காலம் பணியாற்றியவர் ஓய்வு பெற்ற காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் கூடலரசன். இவர் தற்போது தாமிரபரணி சுற்றபுறசூழல் காப்பாளராக சமூக பணியாற்றி வருகிறார். இவர் திருநெல்வேலிக்கு வருகை தரும் தமிழக முதல்வரிடம் கீழ்கண்ட கோரிக்கையை வைத்துள்ளார்.
தமிழக அரசாங்கத்தின் சார்பில் தாமிரபரணியை சீர்படுத்தும் விதமாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறீர்கள். அதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தனியார் நிறுவனங்கள் இணைந்து தாமிரபரணியை பாதுகாக்க திட்டம் வகுத்து வருகிறார்கள். தாமிரபரணியை காப்பாற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கையொட்டி நீதியரசர்கள் தாமிரபரணிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் தாங்கள் வரும் 6 7 தேதிகளின் திருநெல்வேலியில் சுற்றுப்பயணம் வர உள்ளீர்கள் அதே நேரத்தில் தாமிரபரணியை சுத்தப்படுத்தும் நோக்கத்தில்,நெல்லை மாநகராட்சி சாக்கடையை தாமிரபரணியில் கலக்க விடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தாங்கள் சிறப்பான அறிக்கையை வெளியிட வேண்டும். அதிலும் முக்கியமாக பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பாபநாசம் பகுதியில் ஆற்றில் உள்ளே கிடக்கும் துணிகளை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு நிதியை ஒதுக்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள அரிப்பு காரர்கள் எனப்படும் தொழிலாளிகளை கொண்டு மூன்று மாத காலத்திற்குள் ஆற்றில் உள்ள துணிகளை அகற்றி உரிய முறைப்படி அதை அழிக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை உங்களின் உத்தரவுப்படி உடனடியாக நடத்தினால் தான் ஆறு சுத்தமாக வாய்ப்பு உள்ளது. தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தும் நோக்கத்துடன் அனைத்து துறைகளையும் ஒன்றிணைக்க வேண்டும். அதற்கு முக்கியமாக ஒரு மூத்த செயலாளர் நிலையில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து அவர்களின் கீழ் அறநிலை துறை பொதுப்பணித்துறை வருவாய்த்துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் அனைத்தையும் இணைத்து அவர்களின் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடும் அதிகாரத்தை கொடுக்க வேண்டும். அப்போதுதான் நதி சுத்தமாகி குடிக்கும் நீராக மாறும். எனவே தாமிரபரணி எனும் ஜீவநதியை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாமிரபரணி நதிக்காக பணம் ஒதுக்கீடு செய்வார் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


