தூத்துக்குடியில் கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்தும் வகையில் கண்ணிய குறைவாக ஆபாசமான முறையில் நடந்துவரும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நிர்வாிககள் அளித்த மனுவில், “தூத்துக்குடியில் உள்ள முத்துநகர் கடற்கரை பூங்கா, ரோச் பூங்கா மற்றும் இதர பூங்காக்களில் பொதுமக்களுக்கு அருவருப்பை ஏற்படுத்தும் வகையில் பல நபர்கள் ஆபாசமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் குடும்பங்களாக சென்று மகிழ்ந்து வரும் இடங்களில் இத்தகைய ஆபாச செயல்கள் நடந்து வருவது மிகவும் வருந்தத்தக்கது.
பெண்கள், குழந்தைகள் மனரீதியாக மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் இயல்பாக அவ்விடங்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலை காணப்பட்டு வருகிறது சமூக விரோத கும்பல்கள் பூங்காக்களை தங்களின் இருப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். அதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் அப்பூங்காக்களுக்கு சென்று வருகின்றனர். சமூக விரோத கும்பல்கள் ஆபாசமான முறையில் நடந்துவரும் நபர்களால் பொதுமக்கள் பூங்காக்களை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எனவே தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்கா,ரோச் பூங்கா, கடற்கரை சாலை மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இதர பொது இடங்களில் ஆபாசமாக செயல்பட்டு வரும் நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்தும் எதிர்காலங்களில் இதுபோன்று நடைபெறவாத தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
தெருக்களில் நாய்கள், மாடுகள் தொல்லை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாலும் விபத்துக்கள் அதிகமாக நடப்பதாலும் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். பொதுமக்களின் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து ஏற்படுத்தி வரும் தெரு நாய்கள், வெறிநாய்கள் மற்றும் வீட்டு நாய்கள் ஆகியவற்றினை தெருக்களில் இருந்து அப்புறப்படுத்தி பொது மக்களின் நலனை பாதுகாக்குமாறும் தெருக்களில் அதிக அளவில் மாடுகள் நடமாடுவதால் வாகனங்களில் செல்லும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறும் விபத்துகளும் ஏற்பட்டு உயிர் சேதம் உண்டாகிறது ஆகையால் தெருக்களில் மாடுகள் நடமாடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துளள்னர்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் சுலைமான், ஊடகப் பிரிவு அப்சல், மாநகர தலைவர் அப்துல் சமது, பொருளாளர் முகமது இப்ராஹிம், மாநகர செயலாளர் மெட்ரோ ஷேக், வர்த்தக அணி பகுருதீன் அலி, நுகர்வோர் அணி,வினோத், மாநகர துணை செயலாளர் அகமது இக்பால் ஆகியோர் உடன் சென்றனர்.


