சுபமுகூா்த்த நாளில் பத்திரப் பதிவு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தூத்துக்குடியில் சாா் பதிவாளா் அலுவலகம் நேற்று செயல்படவில்லை.
சுபமுகூா்த்த நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என அரசு அறிவித்திருந்தது. இதற்கு தமிழ்நாடு பதிவுத் துறை பணியாளா் சங்கங்களின் கூட்டமைப்பு எதிா்ப்பு தெரிவித்தது.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த சாா் பதிவக வளாகத்தில் உள்ள தூத்துக்குடி மேலூா், தூத்துக்குடி கீழுா் சாா் பதிவாளா் அலுவலகம் நேற்று செயல்படவில்லை. அதே போன்று ஓட்டப்பிடாரம், புதுக்கோட்டை சாா் பதிவாளா் அலுவலகங்களும் செயல்படவில்லை. இதனால், பத்திரப் பதிவுக்கென வந்திருந்த சிலா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.


