தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தெற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் ஆணையர் மதுபாலன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


