சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சிவத்தையாபுரம் அணி வெற்றி பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில், காமராஜர் நகர் கிங் மேக்கர் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி தொடர் ஜன.26ஆம் தேதி தொடங்கியது. போட்டியை முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா துவங்கி வைத்தார். இதன் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சிவத்தையாபுரம் CC அணி முதல் பரிசை தட்டிசென்றது. கிங்மேக்கர் அணி 2வது பரிசு வென்றது.
வெற்றி பெற்ற அணிக்கு சாயர்புரம் உதவி காவல் ஆய்வாளர் அந்தோணி சூசைராஜ் பரிசு மற்றும் கோப்பையையும் வழங்கி, வாழ்த்தி பேசுகையில், இளைஞர்கள் தங்கள் கவனத்தை விளையாட்டில் செலுத்த வேண்டும். விளையாட்டு நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளித்து மனதை ஒருமுகப்படுத்தும். போதையில்லா சமூகத்தை உருவாக்க இளைஞர்கள் உருவாக்க வேண்டும் என்றார். இரண்டாவது இடம் வென்ற அணிக்கு முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெபக்கனி ஞானசேகர் பரிசு வழங்கினார்.


