தூத்துக்குடியில் ரூ.8.92 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியை அமைச்சர் கீதாஜீவன் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், நகர் கோட்டத்திற்கு உட்பட்ட சின்ன கடை தெரு, தட்டார் தெரு, புதுத்தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 520 மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் ரூ.8.92 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 200 KVA திறன் கொண்ட புதிய மின்மாற்றியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
விழாவில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் எடிண்டா, திரேஸ்புரம் பகுதி இளைஞரணி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


