தூத்துக்குடியில் சிவன் கோவில் கோபுர தரிசனத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி நகர மையபகுதியில் சிவன் கோவில் எனப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் பக்தர்கள் திரளானோர் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று கோவில் முன்பு நின்று கோபுரத்தை தரிசனம் செய்துவிட்டு கோவிலுக்குள் செல்வார்கள்.
ஆனால் தற்போது கோவில் அருகே நிற்கும் 2 பெரிய வேப்ப மரங்களின் கிளைகள் கோவில் கோபுரத்தை மறைத்துள்ளது. இதனால் பக்தர்கள் கோபுரத்தை தரிசனம் செய்ய முடியவில்லை. எனவே கோபுர தரிசனம் செய்வதற்கு ஏதுவாக மரக் கிளைகளை வெட்டி ஒழுங்கு படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


