செய்துங்கநல்லூர் அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அகிலாண்டேஸ்வரி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆண்டி திருமகன் கணேசன் (35), இவர் மோட்டார் பைக்கில் திருநெல்வேலியில் இருந்து ஆழ்வார்திருநகரி நோக்கி குவந்து கொண்டிருந்தார். திருச்செந்தூர் – திருநெல்வேலி சாலை, கருங்குளம் பெட்ரோல் பங்க் அருகே வரும்போது திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு வேன் பைக் மீது மோதியது.
இவ்விபத்தில் படடுகாயம் அடை்நத கணேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து வேனை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த மல்லிகா அர்ஜுன் மகன் சித்தேஷ் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


