தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து அலுவலர் அலுவலக வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சாலை விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக மத்திய அரசு சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து அலுவலர் அலுவலக வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினரும், எம்பவர் இந்தியா கௌரவ செயலாளருமான ஆ. சங்கர் தொடங்கி வைத்தார். அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் விளக்கப்பட்டு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. பஸ், லாரிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இதில் வாகன ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்ஸ் மாசிலாமணி செய்திருந்தார்.


