தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வாகன திருட்டு மற்றும் வழிப்பறி தொடர்பாக காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகரச் செயலாளராக எம்.எஸ்.முத்து தேர்வுஇது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் எம்.எஸ். முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்தும் ஆயிரக் கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அது போல் சிசிக்சை பெறும் உள்நோயாளிகளை பார்க்கவும் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு வருவோர் பெரும் பகுதியினர் இருசக்கர வாகனத்தில் வருகின்றனர். இங்கு வாகன நிறுத்துவதற்கு தனியாக இடம் உள்ளது. அதில் வாகனங்கள் நிறுத்த இடமில்லை எனில் பக்கவாட்டில் நிறுத்துப் படுவது வழக்கம். இவ்வாறு இருக்கையில் சமீபகாலமாக வாகனம் திருடுபோவது தொடர்கிறது. மேலும் மருத்துவமனைக்கு வருவோருரிடம் வழிப்பறி நடைபெற்றுள்ளாக தெரிய வருகிறது.
இதனால் மருத்துவமனைக்கு வருவோரிடம் பயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் திருட்டும் வழிப்பறியும் நடைபெறுகிறது என்றால் திருடர்களுக்கும் சமூக விரோதிகளும் இங்கு பயமின்றி நடமாடுகின்றனர். இதுகுறித்து தீவிர கண்காணிப்பு தேவைப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பது காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும். எனவே மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் உரிய கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


