தூத்துக்குடி மாநகரை அழகுப்படுத்தி பிரதான சின்னங்கள் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகரை அழகுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதனொரு பகுதியாக மாநகரின் பிரதான சந்திப்புகளில் செயற்கை நீரூற்றுகளையும், இயற்கை புற்களுடன் கூடிய ஓய்விடங்களையும், பிரதானமான சின்னங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றோம் தற்போது முத்தையாபுரம் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது போன்ற பணிகளினால் தூத்துக்குடி மாநகரமானது தூய்மையானதாகவும் மாசு இல்லாததாக நகரகமாகவும் மாறும் என்று தெரிவித்தார்.


