தூத்துக்குடியில் நடைபெற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் பூப்பந்தாட்ட போட்டியில் புனித மரியன்னை கல்லூரி கோப்பையை வென்றது.
தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி கல்லூரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் பூப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் புனித மரியன்னை கல்லூரி மாணவிகள் அணி கேப்டன் மாளவிகா தலைமையில் சிறப்பாக விளையாடி முதலிடம் பெற்றது. முன்னதாக அரை இறுதி ஆட்டத்தில் வ.உ.சி கல்லூரி அணியை நேர் செட்களில் வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு தகுதிபெற்றது.
இறுதி ஆட்டத்தில் ஏபிசி மகாலட்சுமி கல்லூரி அணியினை 35-28, 28-35 மற்றும் 35-28, என்ற புள்ளி கணக்கில் சிறப்பாக விளையாடி கோப்பையை தட்டி சென்றது. புனித மரியன்னை கல்லூரி மாணவிகள் கடந்தமுறை தென்காசி ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் நடந்தபோது அந்த கல்லூரி அணியை வென்றது. இம்முறை போட்டிகளை நடத்திய ஏபிசி மகாலட்சுமி கல்லூரி அணியை வென்று கோப்பையை தட்டி சென்றது என்பது குறுப்பிடதக்கது.
புனித மரியன்னை கல்லூரி அணியில் கேப்டன் மாளவிகா தலைமையில் அனி, சந்தியா, சசி, முவேதா, கயல்விழி, ஸ்ரீமாரி தங்கம், மெர்ஸி டயானா, பவித்ரா ஆகியோர் விளையாடினார்கள். வெற்றி பெற்ற புனித மரியன்னை கல்லூரி அணிக்கு சுழல்கோப்பை வழங்கப்பட்டது. சிறப்பாக விளையாடிய அனைத்து வீராங்கனைகளையும் அவர்களை சிறப்பாக விளையாட பயிற்சி செய்த பயிற்சியாளர்கள் பாலசிங், ஈஸ்டர் ஆகியோரை மரியன்னை கல்லூரி முதல்வர் சகோ. ஜெஸ்ஸி பார்ணாந்து வாழ்த்தினார்.


