தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற மூத்தோர் சர்வதேச தடகள போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி தம்பதியினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டில் உள்ள சுபசலசாய் தேசிய ஸ்டேடியத்தில், 5வது மூத்தோர் சர்வதேச தடகள போட்டிகள் நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் பல் வேறு நாடுகளை சேர்ந்த 30முதல் 90 வயது வரையிலான 715 வீரர்,வீராங்கனை களும் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
இதில் இந்தியாவில் தமிழகத்தை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட முத்துநகர் மாஸ்டர்ஸ் அத்லடிக்ஸ் செயலாளரும், டிஎஸ்எம்சி சால்ட் கம்பெனி டிரான்ஸ்போர்ட் இன்சார்ஜ் கனகசபாபதி 4X100 மீ மற்றும் தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்க பதக்கங்களும், இவர் மனைவி முத்துநகர் மாஸ்டர்ஸ் அத்லேட்ஸ் பொருளாளர் மகேஸ்வரி ஈட்டி எறியும் போட்டியில் தங்க பதக்கமும், குண்டு எறிதல், தட்டு எறிதல் போட்டிகளில் வெள்ளி பதக்கங்களும் பெற்று வெற்றி பெற்றார்கள். வெற்றி பெற்ற தம்பதியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.


