விளாத்திகுளத்தில் வருகிற 2ஆம் தேதி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பவுண்டேசன் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
மக்கள் சேவையில் 103 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிட் பவுண்டேசன் விளாத்திகுளம் கிளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் உதவியுடன் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம்
வருகிற 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பேருந்துநிலையம் எதிரில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில், கண்புரை நோயாளிகளுக்கு ஆப்பரேஷன் இலவசம். கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து; உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிகள் ரூ.150/- விலையிலிருந்து முகாம் நடக்கும் இடத்திலேயே கிடைக்கும்.
இம்முகாமிற்கு வரும்போது உங்கள் முகவரி சான்றின் நகலை (வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் கார்டு) கொண்டு வந்து சீட்டு பதியும் இடத்தில் கொடுக்கவும். கண்புரை நோயாளிகள், முகாம் தினத்தன்றே தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு லென்சு பொருத்தி நவீன முறை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசம். அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஒரு மாதம் கழித்து இலவசமாக மறுபரிசோதனை செய்யப்படும்.
கண்புரை நோயாளிகள் கவனத்திற்கு: உயர் இரத்த அழுத்த நோய், ஆஸ்துமா, சர்க்கரை நோய், இதய நோய் அல்லது உடம்பில் வேறு ஏதேனும் தொந்தரவு இருந்தால் அருகில் உள்ள பொது மருத்துவரிடம் பரிசோதனை செய்து கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள தகுதி சான்றிதழ் மற்றும் மருந்து மாத்திரைகளுடன் முகாமிற்கு வர வேண்டும். மேலும் மாற்று சேலை, வேஷ்டியுடன் வரவும்.
பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 98652 96870, 98421 43122 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி விளாத்திகுளம் கிளை மேலாளர் தனிகேஷ் தெரிவித்துள்ளார்.


