தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாமில் 142 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி சுயநிதி பாடப்பிரிவுகளில் வணிகவியல் துறை, இளம் செஞ்சிலுவை சங்கம் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி கல்லூரி செயலர் சோமு தலைமை வகித்தார். துணை முதல்வர் அருணாச்சல ராஜன் முன்னிலை வகித்தார், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.
இரத்த தான முகாமில் 142 மாணவர்கள் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர் வி.கோபால கிருஷ்ணன், இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பால் ராஜ், தங்கஜேசு சதிஷ், ஜோசஃபின் மாதரசி, சினேகா மெச்சாடோ ஜான், நாராயணீ, பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.


