திருச்செந்தூர் கோயில் ராஜகோபுரத்தில் அமெரிக்க தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன இடிதாங்கி பொருத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ராஜகோபுரத்தில் புதிதாக ரூ.2.50 லட்சம் மதிப்பில் அமெரிக்க தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன இடிதாங்கி பொருத்தப்பட்டுள்ளது. இந்த இடிதாங்கி கோபுர கலசங்கள் மட்டுமன்றி ராஜகோபுரத்தைச் சுற்றி 80 மீட்டர் சுற்றளவில் பாதுகாப்பு அளிக்கக் கூடியது என கூறப்படுகிறது.


