தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் முத்தமிழ் மன்றம் நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் வீரபாகு வழிகாட்டுதலின் பெயரில் தமிழ்த்துறை தலைவர் டாக்டர் சாந்தி தலைமை வகித்தார். பேராசிரியை டாக்டர் கிருஷ்ண வேணி முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எனது பயணங்கள் என்ற தலைப்பில் பேசினார். அவர் தனது வாழ்வில் செய்த மலைப்பயணம், தாமிரபரணி களப்பயணம், தொல்லியல் பயணம் குறித்து உரையாற்றினார். உதவி பேராசிரியை பொன்கனகா தொகுப்புரையாற்றினார். பேராசிரியர் சீரஞ்சீவி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் வேதியல் துறை உதவி பேராசிரியை பிரன்சஸ் ஜெபா, மண்ணியல் உதவி பேராசிரியர் டாக்டர் முத்துசாமி, வரலாற்று துறை உதவி பேராசிரியர் டாக்டர் மாசான சுடலை, உதவி போரசிரியை சந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


