கோவில்பட்டி அருகே முதியவரைத் தாக்கி மிரட்டல் விடுத்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சிதம்பராபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சக்கையா (62). இவர், அதே பகுதி மேலக் காலனியைச் சேர்ந்த மாரிக்கண்ணன் (22) என்பவரது உறவினரின் இறுதிச் சடங்குக்கான பொருள்களை எடுத்துவந்தாராம்.
அப்போது மாரிக்கண்ணனும், முத்துகிருஷ்ணன் மகன் சுசி இந்திரனும் (19) இறுதி ஊர்வலத்துக்கு முன் ஆடியபடி வந்தனராம். யார் மீதும் விழுந்து விடாமலிருக்குமாறு சக்கையா அறிவுறுத்தினாராம். இதனால், அவரை இருவரும் அவதூறாகப் பேசி தாக்கி மிரட்டினராம். இதில், காயமடைந்த சக்கையா அளித்த புகாரி ன்பேரில், நாலாட்டின்புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.


