கோவில்பட்டி அருகே மனைவி, மாமியாரை பிளேடால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டி விஸ்வநாததாஸ் நகரைச் சேர்ந்தவர் ச. செல்வ லட்சுமி (29). இவருக்கும், விருதுநகர் மாவட்டம் படந்தாள் முத்து ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மகேந்திரனுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.
2 மகள்கள் உள்ளனர். மதுப்பழக்கத்தால் மகேந்திரன் சரிவர வேலைக்கு செல்லாததால் செல்வலட்சுமி கடந்த 2 ஆண்டுகளாக பெற்றோர் வீட்டில் உள்ளார். அவர் தொடுத்த விவாகரத்து வழக்கு கோவில்பட்டி நீதிமன்றத்தில் உள்ளதாம்.
இந்நிலையில், மகேந்திரன் சம்பவத்தன்று இரவு மாமனார் வீட்டுக்குச் சென்று செல்வலட்சுமி, அவரது தாய் கற்பகம் ஆகியோரை பிளேடால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த செல்வலட்சுமி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில், நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து மகேந்திரனை கைது செய்தனர்.


