தூத்துக்குடி சிவன் கோவிலில் வருகிற 29ஆம் தேதி (புதன்கிழமை) தை அமாவாசையை முன்னிட்டு பத்திர தீப விழா நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் சிவன் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை – ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் வருகிற 29ஆம் தேதி (புதன்கிழமை) 111 ஆம் ஆண்டு தை அமாவாசை பத்திர தீப விழா நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 9.00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாவாஜனம், 10.30 மணிக்கு பூர்ணாஹீதி, தீபாராதனை, 11.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், 11.45 மணிக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி, மதியம் 12.30 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம், 1.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் கும்பாபிஷேகம் தீபாராதனை நடக்கிறது.
மாலை 5.30 மணிக்கு பிரகாரங்களில் பத்திரதீபம் ஏற்றுதல், மாலை 6.00 மணிக்கு திருமுறை இசை, இரவு 7.00 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இசையுடன் பஞ்சமூர்த்திகள் தீபாராதனை, இரவு 8.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் எழுந்தருளி ரதவீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கட்டளைதாரர் நாட்டு மருந்து கடை வெங்கடேஷ் ஓதுவார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


