தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் தொழிசெய்ய கருவிகள் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் பைக் விபத்தில் கை, கால்களும் செயல் இழந்த நிலையில் மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் இரும்பு கட்டில் மற்றும் மெத்தை வியாபாரம் செய்து வரும் அஜித்குமார் என்பவருக்கு பேன்ஸி பொருட்கள், நிதியுதவி, மாற்றுதிறனாளி சாலமோன் என்பவருக்கு மெக்கானிக் தொழில் செய்ய பழுது நீக்கும் கருவிகள், லாரி விபத்தில் இடது காலை இழந்த மாற்றுத்திறனாளிக்கு உடற்பயிற்சி செய்ய இரண்டு டம்புள்ஸ் ஆகியவற்றை சமூக ஆர்வலர்கள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் உதவி வழங்கிய அன்னை ஜீவல்லர்ஸ் பிரபுராஜ், தமிழக அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் இசக்கி, ஆசிரியர் காட்வின் செல்லப்பா, ஞானஔி, ஒய்வு பெற்ற ஆசிரியர் ஹென்றிஸ் டீபன்சன், கோஸ்டல் பவர் பிளாணட் நாமதேவன், பாஸ்கர், அடையல் கோயில்துரை, பாலசிங், ஆறுமுகநேரி சித்ரா, ஜோன்ஸ், ரூபன் சாமுவேல் பாலாஜி, ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனரும் பயிற்சியாளருமான இமானுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


