கீழ்பட்டினம் (தருவைக்குளம்) குறித்த முக்கிய தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு ஆய்வு நடத்த பேண்டும் என தூத்துக்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் – தருவைக்குளம் பகுதியினை சேர்ந்த பட்டினமருதூர் கிராமத்தில் வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலராக நான் செய்து வரும் கள ஆய்வில் இந்த பகுதிதான் 13ம் நூற்றாண்டின் இறுதியில் மண்ணில் புதையுண்ட கீழ்பட்டினம் (எ) கயல்பட்டினம் ஆகும்.
இத்தாலிய பயணி திரு.மார்க்கபோலோ(பொ.ஊ1254 -1324) பொ.ஊ.1292ல் இங்கு வரும்போது இந்நகரம் மிகுந்த செல்வ செழிப்போடு உலகின் முதன்மையான செல்வந்தர்கள் பூமி என்றும் அது சமயம் இந்த பகுதியில் ஆட்சிபுரிந்து வந்த பாண்டிய மன்னரின் கருவூலத்தில் தங்கம் மட்டும் 1200கோடி தினார்(51,000டன்) என்ற அளவில் இருந்தது என்று தனது வரலாற்று பதிவேட்டில் பதிவு செய்துள்ளார். மேலும் கணக்கிட வார்த்தை தெரியாத அளவிற்கு முத்துக்கள், மரகதங்கள், பவளங்கள், ரூபி போன்ற படிகங்கள் போன்றவையும் குவியல்களாக இருந்ததாகவும் பதிவு செய்துள்ளார்.
இதே கருத்தைதான் சமகாலத்தினை சார்ந்த பெர்ஷியா பயணி திரு.வாசாஃப் (பொ.ஊ1265 -1328) என்பவரும் தனது வரலாற்றில் பதிவு செய்துள்ளார். நான் கண்டறிந்து முறையாக ஆவணப்படுத்தியுள்ள வரைபட ஆவணங்கள் மற்றும் இலங்கையின் வரலாற்று பதிவேட்டின் ஆவணங்கள் வாயிலாக இந்த மறைந்த நகரமான கீழ்பட்டினம் என்பது தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தின் தருவைக்குளம் ஆகும்.
அவ்வாறு இந்த பகுதிதான் அழிவுற்ற கடற்கரை வணிக நகரம் என்று இப்பகுதியில் நான் இதுநாள் வரை கண்டெடுத்து ஆவணப்படுத்தியுள்ள தொல்லியல் தொன்மங்கள் அடிப்படையில் உறுதியாக நம்புவதால் இந்த அழிவுற்ற நகரத்தின் கருவூலத்தின் இருப்பிடத்தினை தொழில்நுட்பங்கள் வாயிலாக கண்டறிந்திட வேண்டி நமது பிரதான மந்திரி அலுவலகம் வாயிலாக விழிப்புணர்வு மற்றும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


