ஆறுமுகநேரி ராஜமணியபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு அசன பண்டிகை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ராஜமணியாபுரத்தில் உள்ள புனித அந்தோனியார் ஆலய ஆண்டு திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலியும் நடைபெற்று வந்தது. 12 ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அந்தோணியாரின் திருவுருவ சப்பரபவனி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை பெருவிழா கூட்டு திருப்பலி நடந்தது.
வீரபாண்டியன்பட்டணம் பங்குத்தந்தை அலாய்சியுஸ் திருப்பலி நடத்தினார். விழாவில் இன்று அசன பண்டிகை விருந்து நடைபெற்றது. இதனை பங்குத்தந்தை டேவிட் சகாய வளன் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை டேவிட் சகாய வளன், விழா கமிட்டி தலைவர் கலையரசன், செயலாளர் விர்ஜின், பொருளாளர் பீட்டர், துணைத் தலைவர் அந்தோணி ராஜ், துணைச் செயலாளர் கிஷோக் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.


