தூத்துக்குடி மாநகராட்சியுடன் அய்யனடைப்பு ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
அய்யனடைப்பு ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அதிர்ஷ்ட கணபதி ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில முற்றுகையிட்டு, ஆட்சியரிடம் அளித்துள்ளளனர். அந்த மனுவில், “அய்யனடைப்பு ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவில்லை. தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் முழுமையாக பாதிக்கப்படும். இந்த பஞ்சாயத்தில் ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிப்பதால் வீட்டுவரி, தண்ணீர் கட்டணம், மற்றும் இதர வரிகளை செலுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே மக்கள் நலன் கருதி பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோல் அய்யனடைப்பைச் சேர்ந்த ஜோதிலட்சுமி என்பவர் தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். குமாரகிரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூட்டாம்புளி, திருமலையாபுரம், சிலுவைபுரம், சிறுபாடு, மற்றும சவேரியார்புரம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த பொதுமக்களும் தங்களது பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகாரட்சியுடன் இணைக்காமல் தனி பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.


