தூத்துக்குடியில் நடைபெற்ற ரத்ததான முகாமை ஏ.எஸ்.பி., மதன் துவக்கி வைத்து ரத்த தானம் செய்தார்.
தூத்துக்குடியில் குடியரசு தினத்தை முன்னிட்டு அறம் செய்ய விரும்பு இயக்கம் சார்பில் முத்தையாபுரம் பல்ப் அருகில் இரத்ததான முகாம் நடந்தது. முகாமில் தூத்துக்குடி நகர காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் சி மதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தலைமை தாங்கி மருத்துவ முகாமை துவக்கி வைத்து தானும் ரத்த தானம் செய்தார்.
மேலும் இதில் 100க்கு அதிகமான இளைஞர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் ஆர்.சாந்தி தலைமையிலான குழுவினர் ரத்தம் சேகரித்தனர். இதற்கான ஏற்பாடுகளை முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ பிரபு செய்து இருந்தார்.


