செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் குடியரசு தினவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் ஜான்பால் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆறுமுகசேகர் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் துறைத்துலைவர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் கல்லூரி ஊழியர்கள் செய்திருந்தனர்.


