தூத்துக்குடியில் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடியில் பக்கிள்புரம் மதசார்பற்ற ஜனதா தளம் மாவட்ட அலுவலகத்தில் 76 ஆவது குடியரசு தின விழா நடந்தது. மாநிலத் துணைத் தலைவர் வக்கீல் எம் சொக்கலிங்கம் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் நகரில் உள்ள தேசிய தலைவர்கள் காந்தி, காமராஜர், வஉசி, அம்பேத்கர், கக்கன், குருஸ்பர்னாந்து ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் எம்.கோமதிநாயகம், மாவட்டத் தலைவர் ராஜேந்திர பூபதி, நகரத் தலைவர் ஆர். செல்வராஜ் மற்றும் சுயம்புலிங்கம் முருகன் ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


