கோவில்பட்டியில் குடியரசு தின விழாவில், இந்திய வரைபடத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவப்படத்தை வரைந்து கல்லூரி மாணவிகள் அசத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்திய வரைபடத்தில் தூத்துக்குடி மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார்,வ.உ.சியின் திருவுருவப்படத்தை வரைந்து அசத்தினர்.
கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 76 வது குடியரசு தின விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் அருண், சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரிமாணவி கவின்கிருத்திகாதேவி அனைவரையும் வரவேற்றார்.
நாடார் உறவின்முறைச் சங்க பொருளாளர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார். இதில் கல்லூரி மாணவிகள் இந்திய வரைபடத்தில் தூத்துக்குடி மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், வ.உ.சி, ஆகியோரின் திருவுருவப் படத்தை வரைந்து அசத்தினர்.
மாணவர்கள் அனைவரும் குடியரசு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் கல்லூரி முதல்வர் செல்வராஜ்.தமிழ் துறை பேராசிரியர் கனகவல்லி,இயற்பியல் துறை மாணவர் சாய் சூர்யா,கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மாணவி மரிய அனுசியா ஆகியோர் குடியரசு தின உரையாற்றினர். இதில் வணிகவியல் துறை மாணவி திவ்யஜோதி நன்றி கூறினார்.இதில் கல்லூரி துறை, பேராசிரியர்கள்,மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


