தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
உளவியல் நிபுணர் சாம்மாணவிகளுக்கு தேர்தல் மற்றும் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார். நம் ஒட்டு நம் கடமை குடிமக்கள் அனைவரும் வாக்களிப்பது நமது முக்கிய கடமையாகும் என்று கூறினார் மாணவிகள் அனைவரும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ரூபா, துணை முதல்வர் மதுரவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடர்ந்து, வரும் தேர்தலில் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


