தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பிரதான சாலைகளை அகலப்படுத்தியும் ஓரங்களில் பேவர் கற்கள் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தற்போது பிரையன்ட் நகர் பிரதான சாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கம் மற்றும் பேவர் கற்கள் பதிக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அவர், முத்தம்மாள் காலனி பகுதியில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் உடனிருந்தார்.


