ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தனது உயிரை பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து காப்பாற்றிய காவல் ஆய்வாளருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் உடனடியாக தனது உயிரை பணயம் வைத்து காவலர்கள் முனியசாமி மற்றும் விக்னேஷ் ஆகியோரின் உதவியுடன் கயிறு கட்டி காவல் ஆய்வாளரும் ஆற்றில் குதித்து அப்பெண்ணை பத்திரமாக மீட்டார்.
தன் உயிரையும் பொருட்படுத்தாமல்காவல் ஆய்வாளரின் வீர தீர செயலுக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வெகுவாக பாராட்டினார். மேலும் வீரதீர செயலை பாராட்டும் விதமாக இன்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர்ஜிவால் காவல் ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் காவலர்கள் முனியசாமி, விக்னேஷ் ஆகியோரை சென்னை காவல்துறை தலைமையகத்தில் வைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.


