கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான வெற்றியின் மந்திரம் தன்னம்பிக்கை கருத்தரங்கு நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட முதன்மை உதவி ஆளுநர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சாந்திப்பிரியா அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் வி.ஆர்.முத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி வெற்றியின் மந்திரம் குறித்து தன்னம்பிக்கை உரையாற்றினார்.
இதில் ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் வடிவேல் ராமையா உள்பட கல்லூரி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்படபலர் கலந்து கொண்டனர்.


