சிவகளை அகழாய்வில் 400 செ.மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழி எழுத்து கொண்ட பானை காலக்கணக்கீடு செய்த போது கி.மு.685 ஆண்டுகள் முந்தையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதுமக்கள் தாழி ஒன்றும் காலக்கணக்கீடுக்காக அனுப்பட்டது. அது கி.மு.1155 ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர முதுமக்கள் தாழியில் கிடைத்த மூன்று இரும்பு பொருட்களின் காலக்கணக்கீடு தான் தமிழனை உலக அளவில் தலை நிமிரச் செய்துள்ளது. அதாவது கி.மு.2953, கி.மு.3256, கி.மு.3345 என மூன்று இரும்பு பொருட்களின் காலக்கணக்கீடும் தற்போதைய காலப்பணி சுமார் 5300 ஆண்டுகள் பழமையானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் தான் இரும்பு பயன்பாடு தமிழ்நாட்டில் அதுவும் தென்தமிழ்நாட்டில் உள்ள பொருநை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சிவகளையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பெரிய அளவில் பேசப்படுகிறது.
இது தவிர ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு பொருட்களின் கால கணக்கீடும் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் கி.மு.2522 ஆம் ஆண்டு முதல் 2618 வரையில் பயன்படுத்தப்பட்டதாக இந்த காலகணக்கீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி பார்க்கின்ற போது 4500 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிச்சநல்லூரில் இரும்பு காலங்கள் இருந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பு காலம் தொடங்கியது என்றும் கூறினார். தொடர்ந்து 5300 ஆண்டுகள் முன்னரே தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியுள்ளோம். இது தமிழுக்கும், தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும், தமிழ் நிலத்துக்கும் பெருமை என்ற பேசினார். இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்திலிருந்து தான் எழுதப்பட வேண்டும் அதனை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாக செய்து வருகிறது பொருநை ஆற்றங்கரையில் 3,200 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் பயிர் தொழில் நெல் பயிரிடப்பட்டுள்ளது என்பதை சிவகளை ஆய்வு முடிவுகள் வெளிக்கொண்டு வந்தது என்று கூறினார். அதைத் தொடர்ந்து பல சுவாரஸ்யமான வரலாற்று சம்பவங்களை பேசினார்.


