வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக தூத்துக்குடி விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த இமெயில் தவறுதலாக விமான நிலைய போக்குவரத்து துறைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பயணிகளை வழியனுப்ப வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


