தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கிராம உதவியாளர்கள் யாரேனும் இறந்து விட்டால் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும், கிராம உதவியாளர்களை கிராம பணியைத் தவிர பல்வேறு மாற்றுப்பணிகளுக்கு பயன்படுத்தி வருவதை தவிர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். வட்ட துணைதலைவர் அருண்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி, மாவட்ட பொருளாளர் குமாரலிங்கம் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். வட்ட பாொருளாளர் ஹசினா கதிஜாபானு நன்றியுரை வழங்கினார்.


