தூத்துக்குடியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பரிசுகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டுக்கு உட்பட்ட சின்னக்கண்ணுபுரம் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
விழாவில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் காளிதுரை, மகளிரணி நிர்வாகி மாரிச்செல்வி, வட்ட பிரதிநிதிகள் கோவிந்தராஜ், பழனிக்குமார்,வட்ட இளைஞரணி கண்ணன், மோகன், சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்


