சாத்தான்குளம் அருகே பிரசித்தி பெற்ற பொத்தகாலன்விளை திவ்விய திருக்கல்யாண மாதா திருத்தல 112வது ஆண்டு தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளை திவ்விய திருக்கல்யாண மாதா திருத்தலமானது மிகவும் பிரசித்தி பெற்ற இத்திருத்ததல 112-வது ஆண்டு தேரோட்டத் திருவிழா 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி காலை 5 .30 மணிக்கு முதல் திருச்செபமாலை, திருப்பலி, நவநாள் திருப்பலி பெரியதாழை உதவி தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாலை 6மணிக்கு கொழுந்தட்டு பங்குதந்தை பீற்றர்பால் தலைமையில் ஜெபமாலை பகழ்மாலை நடைபெற்றது. 7 மணிக்கு நற்கருணை ஆசீருடன் திருத்தல திருவிழா கொடியை திருத்தல அதிபர் ஜஸ்டின், ஏற்றி வைத்தார். அருட்தந்தை ஸ்தனிஸ்ஜோஅருளுரை வழங்கினார். விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும விழாவில் தினமும் காலையில் 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், 7.30 மணிக்கு திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருனை ஆசீரும் நடைபெறுகிறது. 8-ம் திருவிழாவான ஜனவரி 21-ம் தேதி மாலையில் சாத்தான்குளம் மறைவட்ட முதன்மைகுரு செல்வஜாரஜ் தலைமையில் நற்கருனை பவனியும், மறையுரையும் வழங்குகிறார்.
9-ம் திருவிழாவான ஜனவரி 22-ம் தேதி காலையில் 5.30 மணிக்கு முதல் திருப்பலியும் 7. மணிக்கு திருயாத்திரையுடன் திருப்பலியும் இரவு 6 மணிக்கு சிகர நிகழ்ச்சியாக திருக்கல்யாண மாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட் ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடைபெறுகிறது.
10-ம் திருவிழாவான ஜனவரி 23-ம் தேதி காலையில் 4 மணிக்கு தேரில் மலையாள திருப்பலி, 5மணிக்கு தமிழில் திருப்பலி, 6.30 மணிக்கு பெருவிழா கூட்டுத்திருப்பலி, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 10.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலியும், 12 மணிக்கு தமிழில் திருப்பலியும், 4.30 மணிக்கு தமிழில் திருப்பலியும் நடக்கிறது. மாலை 6மணிக்கு திருக்கல்யாண மாதாவின் தேர்ப்பவனியும், இரவு 11மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜஸ்டின் மற்றும் இறை மக்கள் செய்து வருகின்றனர்.


